தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு!
தேர்தல் புறக்கணிப்பு
கோவில்பட்டி அருகே பேருந்து நிறுத்ததிற்கு செல்ல சரியான பாதை அமைத்து தரவில்லை என்று கூறி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சிதம்பரம்பட்டி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் மற்றும் அருந்ததியர் சமுதாய மக்கள் என சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து சாலையில் உள்ள பேருந்து நிறுத்திற்கு செல்ல சரியான பாதை இல்லமால் பரிதவித்து வருகின்றனர். பலமுறை மனுஅளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பலமுறை மனு அளித்து பேருந்து நிறுத்ததிற்கு செல்ல பாதை அமைத்து தரப்படமால் இருப்பதை கண்டித்து அக்கிராம மக்கள் தாங்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Next Story