புதிய தார் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

புதிய தார் சாலை அமைக்க  கிராம மக்கள் கோரிக்கை

தார் சாலை அமைக்க கோரிக்கை 

செங்கம் அருகே சாலையை அகலப்படுத்தி புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அண்டப்பேட்டை கிராமத்தில் இருந்து அம்மனூர் கூட்ரோடு வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், இந்த சாலையை பயன்படுத்தி செங்கம் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும் ,குழியுமான சாலையை அகலப்படுத்தி புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story