ஆற்றுக்குள் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் சிறுகாசாவயல் கிராம மக்கள்
பழமையும், பெருமையும் மிக்க, நம் பாரதத் திருநாடு சுதந்திரம் அடைந்து, பல ஆண்டுகளாக ஆகிறது. ஆனால் இன்னமும் அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், தண்ணீருக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். சுத்தமான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு தரவேண்டும், என்ற அடிப்படை சிந்தனை கூட எந்த அரசியல்வாதிக்கும் இதுவரை தோன்றவில்லை என்பதே இந்திய குடிமகனின் வேதனை. இங்கே பெண்கள். ஐந்து குடம் தண்ணீருக்கு, பல கிலோமீட்டர் தூரம் நடைபயணம்.
அதுவும் இடுப்பில் சுமையுடன். குடிநீர் வசதி இல்லாத கிராமங்கள், இன்றும் இருக்கிறது என்றால் அவமானம், அரசியல்வாதிகளுக்குத் தான். தேடிச் சென்று, ஓட்டு கேட்பதோடு வேலை முடிந்துவிட்டதென நினைக்கும் அவர்களின் அறியாமையால், தண்ணீரைத் தேடிக் கொண்டே இருக்கின்றனர், கிராம மக்கள். அத்தகைய கிராமத்தைத் தேடி, நமது நிருபர்கள் குழு பயணித்தது. வரிசையில் நின்றும், நடந்தும் கால்கடுக்கும் வலியோடு, வேதனையும் கண்களில் தெறித்தது, நம் கிராமத்து பெண்களுக்கு. என்று தீரும் இந்தத் தண்ணீர் தாகம் இந்தக் கிராமங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உங்கள் பார்வைக்கு படம் பிடித்துத் தருகிறோம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கீழ்குடி வாட்டாத்தூர் ஊராட்சியை சேர்ந்தது சிறுகாசவயல்..... இக்கிராமத்தில் ஐம்பதற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.. இங்குள்ள மக்கள் குடிநீர் பயன்படுத்த ஊராட்சி நிர்வாகம் இரண்டு குடிநீர் பைப்புகளே அமைத்து தந்துள்ளனர்.... இருந்த போதிலும் சுமார் இரண்டு மாதங்களாக குழாயில் வந்த தண்ணீரும்.....தற்போது வராமல்.....புஸ்...என்ற சப்தத்துடன் காற்று வரும் சப்தமே கேட்கிறது.
குடிதண்ணீருக்காக இப்பகுதி பெண்கள் கைக்குழந்தையை சுமந்தபடி ஒரு கையில் குடத்துடன் மற்ற பெண்களுடன் இணைந்து ஆற்றுக்கு பல கிலோ மீட்டர் நடந்து சென்று.... ஆற்றுக்குள் ஊற்று தோண்டி குடிப்பதற்கு குடிநீர் எடுத்து வருகின்றனர்... எனவே இந்த குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும்....சிறுகாசாவயல் கிராம பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிநீர் திட்ட அதிகாரிகள் பார்வையிட்டு.... இப்பகுதி மக்களுக்கு தூய குடிநீர் தங்கு தடையின்றி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்