பழங்குடியின பெண்களை தாக்கிய சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம்.
மூன்று பழங்குடியின பெண்களை தாக்கிய சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா என்னும் பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று ஏலமன்னா கிராமத்தில் சரிதா (29) என்ற பெண்மணி காலை அடுப்பு பற்ற வைக்க வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது அந்தப் பகுதியில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென உறுமிக் கொண்டு சரிதாவை கழுத்துப்பகுதியில் தாக்கியுள்ளது. உடனடியாக அவர் கூச்சலிட்ட பிறகு அந்தப் பகுதிக்கு வந்த கிராம மக்களைக் கண்டு சிறுத்தை ஓடிவிட்டது பின்பு மீண்டும் அதே பகுதியைச் சேர்ந்த துர்கா (65) வள்ளியம்மாள்(65) என்ற பெண்மணிகளையும் தாக்கியுள்ளது. தொடர்ந்து ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து பழங்குடியின் பெண்கள் மூன்று பேரை தாக்கிய சிறுத்தையால் ஏலமன்னா கிராம பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. தற்போது மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags
Next Story