திருவெண்ணெய்நல்லூரில் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

திருவெண்ணெய்நல்லூரில் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

திருவெண்ணெய்நல்லூரில் மதுபாட்டில்கள் விற்பதை தடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தரப் பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், தங்கள் பகுதியில் இயங்கி வரும் ஒரு சால்னா கடையில், மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாகவும், அங்கு மதுகுடித்துவிட்டு வருபவர்கள் பெண்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள், எனவே இதுப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் பிரச்சினைக்குரிய கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தபகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story