கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ஆக்கிரமிப்பை அகற்றி பட்டா வழங்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா ஜம்போதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100- க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அலுவலக நுழைவுவாயிலை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பட்டா வழங்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் அவர்களை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே அனுப்பி வைத்தனர். அதன் பேரில் அவர்கள், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத் தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஜம்போதி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதிய இடவசதி இல்லாத தால் வீட்டுமனைப்பட்டா கேட்டு பலமுறை மனு அளித்து வருகி றோம். இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்கள் கிராமத்தில் 7½ ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருக் கிறது. இந்த நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிர மிப்பு செய்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின மக் கள், அந்த இடத்தில்தான் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். எனவே அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பட்டியலின மக்களாகிய எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.