சேலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனு

சேலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மனு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

சேலம் அருகே ஓம் சக்தி நகர் பகுதிக்கு காவிரி குடிநீர் வசதி செய்து தர கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஓம் சக்தி நகர் குடியிருப்பு பகுதி பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பாகல்பட்டி கிராமம் ஓம் சக்தி நகரில் சுமார் 2500 பேர் குடியிருந்து வருகிறோம்.

கடந்த மாதம் 20-ந் தேதி அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரில் வந்து குடிநீர் வசதி வேண்டி மனு வழங்கினோம். அந்த மனுவின் மீது எங்களிடம் பரிசீலனை எதுவும் செய்யாமல் ஏதும் தெரிவிக்காமல் அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி மூலம் தகவல் எங்களுக்கு வந்தது. மேலும் நாங்கள் முதல்வரின் தனி பிரிவிற்கு அனுப்பிய மனு மீது அந்த பகுதி காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் பாகல்பட்டி பஞ்சாயத்திற்கு முழுவதும் வழங்கப்படுவதாகவும் மேலும் ஓம் சக்தி நகர் பகுதி வரையறுக்கப்பட்ட குடியிருப்பு பட்டியலில் இல்லை எனவும் இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்து அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நாங்கள் முறைப்படி இந்த பகுதியில் 2017-க்கு பிறகு அரசால் வரையறுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் என ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பெற்றுள்ளோம். இது தவிர பஞ்சாயத்து முறைப்படி வீட்டு வரி செலுத்தி வருகிறோம்.

எங்களது ஓம் சக்தி நகர் குடியிருப்பு பகுதியில் கே. ஆர் தோப்பூர் துணை மின் நிலையத்தின் தனிப்பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதியை வரன்முறை செய்து காவிரி குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Tags

Next Story