இலவச வீட்டு மனை பட்டா வேண்டி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தொட்டம்பட்டியில் 40 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் நிலையி, இலவச வீட்டு மனை பட்டா வேண்டி ஆட்சியரரிடம் மனு அளிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட தொட்டம்பட்டி கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் சாமாண்ட அள்ளி ஊராட்சி தொட்டம்பட்டி ஆர் எஸ் என்ற விலாசத்தில் சுமார் 40 வருடமாக சாலை பாதை புறம்போக்கு வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா நிலம் ஏதும் இல்லை எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டி தொட்டம்பட்டி ஊர் பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்களிடம் மனு கொடுத்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story