காலி குடத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

காலி குடத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

காலி குடங்களுடன் ஆட்சியர் அனுப்பி வைப்பு

தர்மபுரி மாவட்டம்,குப்பனூர் ஊராட்சியில் தண்ணீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதால் காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் குப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டேகுப்பம் கிராமத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் குடிநீர் வேண்டி பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடாத நிலையில் இன்று குடிநீர் வேண்டி கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story