குண்டும் குழியுமான சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தில் சுமார் 180-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், பல ஆண்டுகளாக இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது, மேலும் வானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது, இதனால் கிராம மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர், இது சம்பந்தமாத சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் மற்றும் குற்றம் சாட்டுகின்றனர், இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, இது சம்மந்தமாக அக்கிராம மக்கள் தெரிவிக்கையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நல்லாவூர் கிராமத்தில் உள்ள சாலைகள் மிகவும் சேதம் அடைந்து சேரும் சகதியுமாக உள்ளதாகவும் இது சம்பந்தமாக பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கிராமத்தில் மற்றொரு தெருவில் உள்ள சாலையை கூட அரசு சார்பில் போடப்படவில்லை அதற்கு மாறாக அதே கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவர் அவர் சொந்த முயற்சியில் சாலையை அமைத்துக் கொடுத்துள்ளார் அதை தவிர கிராமத்தில் மற்ற தெருக்களில் உள்ள சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமான காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
Next Story