கிராம மக்கள் நூதன போராட்டம்
கிராம மக்கள் நூதன போராட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூவாணி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலணியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த காலனி பகுதியில் குடிநீர்,வாறுகால், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லை என்றும் இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அருந்ததியர் காலனி பகுதியில் குடிநீர் வசதி வேண்டி தொடர் போராட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண் துடைப்பிற்காக சின்டெக்ஸ் டேங்க் மட்டும் பயன்பாட்டிற்க்கு இல்லாமல் தலைகீழாக கவிழ்த்து வைத்து அதற்கு பைப் கனெக்சன் கொடுக்காமல் அழக்கழித்ததால் கிராம மக்கள் ஆத்திரமடைந்து தலை குப்புற கிடந்த சின்டக்ஸ் டேங்கிற்கு மாலை அணிவித்து, பாடை கட்டி ஊர்வலமாக தூக்கி சென்று நூதன முறையில் விடியா திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.