ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

போராட்டம்
ஈரோடு அருகேயுள்ள கூரபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேறுவதாக , இதனால். நிலத்தடி நீர் மாசடைந்து விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கிராமமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் ஈரோட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .மேலும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகனை அவரது அறையில் வைத்த்து முற்றுகையிட்டு , தரையில் அமர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிராமக்கள் , மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story