கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
மாப்பிளையூரனியில் குடிநீர் குளத்தில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து, தூத்துக்குடி - மதுரை சாலையில் மக்கள் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாப்பிள்ளை யூரணி கிராமத்தில் பொதுமக்கள் குடிப்பதற்காக பயன்படுத்தி வரும் மாப்பிளையூரனி குளத்தில் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கழிவு நீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மதுரை சாலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குளத்தில் கழிவுநீர் கலப்பது குறித்து பஞ்சாயத்து தலைவர் சரவணனிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படாத தொடர்ந்து தாங்கள் குளத்தின் தண்ணீரை குடிநீராக பயன்படுத்த வரும் நிலையில் தற்போது அந்த குளத்திலும் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.