சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

சேதம் அடைந்த சாலை

வடுகநாகம் பள்ளி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட, மலைக்கோவிலூர் பகுதியில் இருந்து மூலப்பட்டி வழியாக வடுகநாகம்பள்ளிக்கு செல்லும் சாலை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது்.

இந்த சாலையானது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவிலும் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்து உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

விவசாயிகள் தங்கள் விலை நிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்துச் செல்வதற்கும், விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கும் ஏற்ற சாலையாக இல்லாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கும், அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த வேலையில்,

அண்மையில் இந்த சாலை அமைப்பதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டு, போதிய நிதியும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆயினும், இன்னும் சாலை அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகளும், கனராக வாகனங்களும் இந்த சாலையை கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும்,இரவு நேரங்களில் இந்த சாலையில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால், பலரும் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, விரைவாக இந்த சாலையை சீரமைத்து அமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story