கிராம மக்கள் முற்றுகை போராட்டம்!

அவிநாசி அருகே துலுக்கமுத்தூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மோசடி பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே துலுக்கமுத்தூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அறிமுகம் ஆகி ஏலச்சீட்டு நடத்தி தொழில் தொடங்குவதற்கு வங்கிகடன் பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சாந்தாமணி என்பவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரும்படி பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே துலுக்கமுத்தூர் கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் சாந்தாமணி என்பவர் ஸ்ரீ கிருஷ்ணா மகளிர் சுய உதவி குழு என்கிற பெயரில் அறிமுகமாகி கிராம மக்களிடம் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். வங்கியில் கடன் பெற்று தருவதாகவும் கூறி உள்ளார்.இதனை நம்பிய கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாந்தாமணியிடம் மகளிர் சுய உதவி குழுக்கள் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர்.தொடர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்,இந்த ஏல சீட்டில் அகிலா என்கிற நபர்முதல் தவளையிலேயே 90 ஆயிரம் ரூபாய் பெற்று ,மாதாமாதம் தவணை தொகையை கட்டி வந்துள்ளார்.

திடீரென தனது கணவர் மருத்துவ செலவிற்காக 40 ஆயிரம் ரூபாய் கடனாக பணத்தை பெற்றுள்ளார். இந்த நிலையில் கடன் வழங்கியதற்காக அவரது பெயரில் இருந்த இடத்தின் அசல் பத்திரம், கிரைய ஒப்பந்தம் பத்திரம்என அனைத்து ஆவணங்களையும் சாந்தாமணி வைத்து கொண்டு,வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றுக் கொண்டு கடனை வழங்கியுள்ளார்.வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தி வீட்டின் அசல் பத்திரத்தை கேட்ட போது அவரது மருமகன் முருகவேல் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வெற்று பேப்பரில் கையெழுத்து போட்டதை வைத்துக் கொண்டு 6 லட்ச ரூபாய் பணத்தை தர வேண்டுமென கூறி உள்ளனர்.அவசர தேவைக்கு பெற்ற கடனுக்காக வட்டியுடன் சேர்த்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை அகிலா திருப்பி செலுத்தி உள்ளார்.தனது இடத்தை கிரைய ஒப்பந்தம் எழுதிக் கொடுக்காத நிலையில்சொத்தை அபகரிக்கும் நோக்கில் போலி ஆவணம் உருவாக்கிஅவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணமாக பதிவு செய்துள்ளனர். தன்னைப் போன்று அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட துலுக்க முத்தூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் சுய உதவி குழுக்கள் என்கிற பெயரில் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து வரும் நபர் சாந்தாமணி மீது நடவடிக்கை எடுத்து பணத்தையும் வீட்டு பத்திரத்தையும் மீட்டு தர கோரி 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட கண்காணிப்பாளர் இடம் மனு அளித்தனர்

Tags

Read MoreRead Less
Next Story