ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்


வெம்பாக்காம் அருகே சின்ன ஏழாச்சேரி கிராம நத்தம் ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சின்ன ஏழாச்சேரி கிராம பகுதியில் மாரியம்மன் கோயில் எதிரில் 65 சென்ட் நத்தம் நிலத்தில் அப்பகுதி மக்கள் சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊராட்சி நிர்வாகம் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் கிராம மக்களை மீறி ஆக்கிரமிப்பாளர்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிராம மக்கள் கூடி செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி அவர்களிடம் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று கிராம மக்கள் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த வட்டாட்சியர் தீவிர விசாரணை நடத்தி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சின்ன ஏழாச்சேரி கிராமத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட போது ஆக்கிரமிப்பாளர்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்களுடன் எதிர்பாளர்களிடம் காவல்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகளை வெம்பாக்கம் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி துணை வட்டாட்சியர் காயத்ரி மற்றும் வருவாய் துறையினர் மூலம் அகற்றினர்.

Tags

Next Story