மழை வேண்டி ஏரிக்கு தண்ணீர் வரவேண்டும் என கிராம மக்கள் சிறப்பு பூஜை

ஓசூர் அருகே மழை வேண்டி ஏரிக்கு தண்ணீர் வரவேண்டும் என கிராம மக்கள் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டுள்ளனர்.
மழை வேண்டி ஏரிக்கு தண்ணீர் வரவேண்டும் என சிறப்பு பூஜை கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தினந்தோறும் கடும் அவதிகளை சதித்து வருகின்றனர். பெங்களூர் நகரில் மிக அருகில் உள்ள ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பல்வேறு ஏரி குளங்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தண்ணீருக்காக பொதுமக்கள் கடும் அவதிகளை சந்திக்க வேண்டிய சூழலும் உருவாகி வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் மன்னரால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த துக்லம்மா என்ற சிறியகோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டால் பொழியும் என்ற ஐதீகம் உள்ளது, வறட்சி ஏற்படும் காலங்களில் இந்த கோயிலில் பொதுமக்கள் சிறப்பு பூஜைகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஓசூர் ஏரி தெருவை சேர்ந்த பொதுமக்கள் பழமைவாய்ந்த இந்த துக்லம்மா கோயிலில் மழை வேண்டி அம்மனுக்கு ஆடு வெட்டி படையல் இட்டு பல்வேறு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் துக்லம்மா கோயிலில் இவ்வாறு வழிபாடு மேற்கொண்டால் நிச்சயம் மழை பொழியும் எனவே எங்களது கோரிக்கையை அம்மன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து துக்கலம்மா பூஜைகள் செய்து வழிப்பட்டு செல்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story