தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு கிராம மக்கள் அவதி !

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு கிராம மக்கள் அவதி !

 சாக்கடை கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகாராஜகடை கிராமத்தில் புளியந்தோப்பு நகரில் சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலைகளில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகாராஜகடை கிராமத்தில் புளியந்தோப்பு நகரில் சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலைகளில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் 30 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் இப்பகுதியில் இருந்து விடப்படும் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆனது சாலையில் தேங்கி நிற்கிறது.

இதனால் தினம்தோறும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வேசி கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இந்த தேங்கி நிற்கும் கழிவு நீர் மற்றும் மழை நீரை அகற்றி முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags

Next Story