ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கே.எட்டிப்பட்டி ஊராட்சி முக்கராம்பள்ளி காமராஜர் நகரில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பகுதி பொது மக்களுக்கு குடிநீர், தெரு விளக்கு, கழிவு நீர் காழ்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைக்காக, சாமல்பட்டி, முத்தாகவுண்டனூர், குன்னத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல ரயில்வே மேம்பாலத்தின் அடியில் ஆபத்தான நிலையில் பாம்பாறு அணைக்கு செல்லும் ஆற்றை கடக்கின்றனர். இந்த ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும்போது, பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் ஆபத்தில் சிக்குகின்றனர்.

அவசர தேவைகளுக்கு மாற்று பாதையில் சென்றால் 9 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. தரைப்பாலம் அமைக்க எட்டிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story