மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

செங்கல்பட்டில் கடந்த இரண்டு வார காலமாக மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.


செங்கல்பட்டில் கடந்த இரண்டு வார காலமாக மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள காவாத்தூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.. இக்கிராமத்தில் பழைய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) இரு வாரங்களுக்கு முன்பு பழுதானது பழுதானதை சரி செய்து தர கோரி மின்வாரிய அலுவலகத்திற்கு பலமுறை மனு அளித்தும் இதுவரையில் இவர்கள் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கவில்லை எனவும் 100 கேவி கொண்ட மின்வாற்றியை எடுத்துவிட்டு பழைய 65 கே வி இன் மாற்றியே மாற்றி அமைத்தனர்.

ஆனால் இது போதிய அளவு மின்சார சப்ளை செய்ய படாததால் நீ கிராமத்தில் உள்ள வீட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளதாகவும்புதிய புதிய மின் மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தற்காலிகமாக நடவடிக்கை எடுப்பதாக கூறி கிராம மக்களை ஏமாற்றி வருவதாகவும் இதுவரை கடந்த 12 நாட்கள் மின்சாரம் இல்லாமல் கிராமத்தில் ஒரு பகுதி மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மின்சார நிர்வாகத்திடம் எப்பொழுது மின் பழுது சரி பார்க்கப்படும் என கேட்டால் இப்போது சரி செய்கிறோம், நாளை சரி செய்கிறோம் என மின்வாரிய அதிகாரிகள் காலம் கடத்துவதாகவும் தாங்கள் இந்த கோடை வெயில் காலத்தில் எப்படி மின்சாரம் இல்லாமல் வசிக்க முடியும் எனவும் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதாகவும் இதனால் தாங்கள் சரிவர உறக்கமில்லாமல் தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்... எனவே மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story