விழுப்புரம் 100 % வாக்களிப்பு - 1000பேர் கோலமிட்டு விழிப்புணர்வு

விழுப்புரம் 100 % வாக்களிப்பு - 1000பேர் கோலமிட்டு  விழிப்புணர்வு

விழிப்புணர்வு 

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அடைந்திடும் வகையில்ரூபவ் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் பல்வேறு துறைகளின் சார்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் திட்டம் சார்பில், 1000 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் ரங்கோலி கோலமிட்டும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், 700 அங்கன்வாடி மைய பணியாளர்கள் ஒருங்கிணைந்து வாக்களித்தற்கான அடையாள மை சின்னம் உருவாக்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, தேர்தல் செலவினப் பார்வையாளர் ராகுல் சிங்கானியா முன்னிலையில் பார்வையிட்டார்.

Tags

Next Story