கியாஸ் சிலிண்டரை தலையில் சுமந்து வாக்கு சேகரித்த விழுப்புரம் வேட்பாளர்
வாக்கு சேகரிப்பு
கியாஸ் சிலிண்டரை தலையில் சுமந்து வாக்கு சேகரித்த விழுப்புரம் வேட்பாளர். வியந்து பார்த்த மக்கள்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்வதற்காக பிரசாரத்தின்போது சாலையோர கடைகளில் டீ போட்டும், வடை சுட்டும், பரோட்டா போட்டவாறும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான சமையல் கியாஸ் சிலிண்டரை தலையில் சுமந்தவாறு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தது பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதாக இருந்தது.
Next Story