விழு‌ப்புர‌ம் வேட்பாளர் நூதன பிரச்சாரம்

விழு‌ப்புர‌ம் வேட்பாளர் நூதன பிரச்சாரம்

 நூதன பிரச்சாரம்

விழுப்புரத்தில் தலையில் சிலிண்டர் சின்னத்தை சுமந்து, வேட்பாளர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரத்தில் தலையில் சிலிண்டர் சின்னத்தை சுமந்து, வேட்பாளர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் (தனி) தொகுதிக்கான தேர்தலில் அதிமுக, பாமக, விசிக, நாம் தமிழர் கட்சி, இந்திய குடியரசு கட்சி வேட்பாளர்களும், 11 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இவர்கள், தொகுதி முழுவதும் பரவலாக ஓட்டு கேட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய குடியரசு கட்சி வேட்பாளரான, விழுப்புரத்தை சேர்ந்த ஆறுமுகம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டளார். விழுப்புரத்தில் நேற்று காலை அவர், கலைஞர் நகர், திருச்சி சாலை, பஸ் நிறுத்த ஷெட் உள்ளிட்ட இடங்களில், வேட்பாளர் ஆறுமுகம் தனது சிலிண்டர் சின்னத்தை (எரியவாயு உருளை) தெரிவிக்கும் விதமாக, தலையில் சமையல் எரிவாயு உருளையை சுமந்தபடி தொடர்ந்து, பஸ் நிறுத்த பயணிகள், மாணவர்கள், பொது மக்கள், வியாபாரிகளிடம், துண்டு நோட்டீஸ் வழங்கி வாக்கு கேட்டு சென்றார்.

Tags

Read MoreRead Less
Next Story