விழுப்புரத்தில் அரசு பஸ்சின் படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு

X
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பைத்தாம்பாடி, எனதி ரிமங்கலம் வழியாக பண்ருட்டிக்கு நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இடம் கிடைக்காத மாண வர்கள் சிலர், பஸ்சின் படிக்கட்டில் தொங்கிய வாறு ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் ஒரு படிக்கட்டு உடைந்து கீழே விழுந்தது. அப்போது பஸ் சீரான வேகத்தில் சென்றதால், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த பள்ளி மாணவர்கள் சிலர் கீழே விழுந்து லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டனர். படிக்கட்டு உடைந்து விபத்துக்குள்ளானதால் பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு போக்குவரத்துக்கழகத்தின் அலட்சியம் காரணமாகவும், முறையாக பராமரிக்கப்படாததாலும் பஸ்சின் படிக்கட்டுகள், மேற்கூரைகள், பக்க வாட்டு தகடுகள் அடிக்கடி உடைந்து விபத்துக்குள்ளாவதால் பயணிகள் மிகவும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுபோன்ற விபத்துகள் நடைபெறாதவண்ணம் தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Tags
Next Story
