விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி 

விழுப்புரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குந்தன் கிரினிபழம் விதைகளை விற்பனை செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம், மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 45), விவசாயி. இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர், கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஜனவரி 2-ந் தேதி முருக்கேரி சிறுவாடி கிராமத்தில் உள்ள ஒரு விதை விற்பனை நிலையத்தில் குந்தன் கிரினிபழம் விதை வாங்கினேன். அந்த விதையை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த விதை தமிழக அரசால் தடை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

என்னிடம் விதை வாங்கியதற்கான ரசீது உள்ளதா எனவும், ரசீது இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர். உடனே நான் விதை வாங்கிய விற்பனை நிலைய உரிமையாளரிடம் சென்று ரசீது கேட்டதற்கு அவர் தர மறுத்தார். இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். தரமற்ற விதை விற்ற அந்த கடைக்காரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு உரிய நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தார். மனுவைப் பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.

Tags

Next Story