விழுப்புரம் கல்லூரி மாணவி மாயம்

விழுப்புரம் கல்லூரி மாணவி மாயம்

காவல்துறை விசாரணை


விழுப்புரம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி காணாமல் போனார்.
விழுப்புரம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி காணாமல் போனார். விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம் தாலுகா ஆயந்தூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் மகள் கவுசல்யா, 19; இவர், விழுப்புரம் அரசு கல்லூரியில் பி.காம்., படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி மாலை வீட்டில் இருந்தபோது, செல்போன் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அதனை அவரது தாயார் விஜி கண்டித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த வெளியே சென்ற கவுசல்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெ ற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story