விழுப்புரம் : ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல்.

விழுப்புரம் :  ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல்.

 ஆட்சியர் பழனி

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத் தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 10-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டம் முழுவ தும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

தேர்தல் விதிமீறலை கண்காணித்து தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 3 பறக்கும் படை குழுக்களும், 3 நிலை கண்காணிப்பு குழுக் களும் இயங்கி வருகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணமோ அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதிப்புடைய பொருட்களோ எடுத்துச்செல்லும் அனைத்து நபர்களும் அவர்கள் எடுத்துச்செல்லும் பணம் அல்லது பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணமோ அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதிப்புடைய பொருட்களை எடுத்துச்சென்றாலோ தேர்தல் பறக்கும் படை குழுவினர் மூலம் அவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story