விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது
தேர்வு எண்ணை சரிபார்க்கும் மாணவிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வை 24,528 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ஆம் தேதிதொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக பத்தாம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கான செய்முறைத்தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் 29}ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தமிழ் பாடத்துடன் பொதுத்தேர்வு தொடங்கியது.
விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டங்களில் மொத்தம் 126 தேர்வு மையங்களில் 12,617 மாணவர்கள், 11,911மாணவிகள் என மொத்தமாக 24,528 பேர் தேர்வெழுதினர்.முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என்பன உள்ளிட்ட பொறுப்புகளில் என மொத்தம் 2021 பேர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் பொதுத்தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் 167 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். 466 மாற்றுத்திறனாளிகள் தேர்வில் சொல்வதை எழுதுவதற்காக தனியே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தமிழ்பாடத்தைத் தொடர்ந்து மார்ச் 28}ஆம் தேதி ஆங்கிலம்,
ஏப்ரல் 1}ஆம் தேதி கணக்கு, 4}ஆம் தேதி அறிவியல், 6}ஆம் தேதி விருப்பமொழிப் பாடம், 8}ஆம் தேதி சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். தேர்வெழுத வந்த மாணவ, மாணவிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.