விழு‌ப்புர‌ம் தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

விழு‌ப்புர‌த்தில் 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், முன்னிலையில் நடைபெற்றது. 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1966 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 9614 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்களின் மூலம், முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 1461 இதில் 70.செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1588 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு செஞ்சி, அரசு பெண்கள் மேல்நிலைப்பளள்ளியிலும், 71.மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 925 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பவ்டா கல்லூரியிலும், 72.

திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு திண்டிவனம் மான்போர்ட் பள்ளியிலும், 73.வானூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1080 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வானூர் ஸ்ரீ அரவிந்தர் கலை மற்றும் அறியியல் கல்லூரியிலும், 74.விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1704 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 75.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1366 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு லட்சுமிபுரம் சுவாமி விவேகானந்தா கல்லூரியிலும், 76.திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1490 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு திருக்கோவிலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 9614 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story