விழுப்புரம் எம்எல்ஏ நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்

விழுப்புரம் எம்எல்ஏ நிதியில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்
வாகனங்கள் வழங்கல் 
விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின்கீழ் ரூ.2.88 லட்சம் மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின்கீழ் ரூ.2.88 லட்சம் மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில்,

விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியின்கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரினை மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் எம்எல்ஏ இலட்சுமணன் முன்னிலையில் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையில், உதவித்தொகை மற்றும் சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம்ரூபவ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தலா ரூ.96011 மதிப்பீட்டில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ2,88,033 மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சச்சிதாநந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story