கயத்தூரில் புதிதாக அரசு நெல் கொள்முதல் நிலையம்
புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கயத்தூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு, தொடர்ந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவி துரை, பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், துணை தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்பார்வையாளர் சத்திய மூர்த்தி வரவேற்றார். விழாவிற்கு புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிதாக கட்டப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர் ரவிதுரை, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், மாவட்ட தலைவர் அரிகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்திக்குமார், சாவித்திரி பாலு, கண்காணிப்புக் குழு எத்திராசன், மாவட்ட விவசாய சங்க செல்வராஜ், ஆசிரியர் குமாரகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகையன், குமார், சக்கரவர்த்தி, அருள்மொழி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன், முன்னாள் கவுன்சிலர் வெங்கடபதி, தொழில்நுட்ப அணி அன்பரசன், ஊராட்சி செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.