விழுப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது சாணி வீச்சு

விழுப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது சாணி வீச்சு

போலீசார் வழக்கு

விழுப்புரம் அருகே முதியோர் உதவித்தொகை வாங்கித் தராத ஊராட்சி மன்ற தலைவர் மீது சாணியை ஊற்றிய வரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே முதியோர் உதவித்தொகை வாங்கித் தராத ஊராட்சி மன்ற தலைவர் மீது சாணி ஊற்றிய வரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த தென்குச்சிபாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த, நடராஜன் மகன் விஜய சாரதி(36). இவர் தென் குச்சிபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு 7 மணி, விஜய சாரதி மற்றும் அவரது மனைவி விஜயசாந்தி ஆகியோர் தென்குச்சிபாளையம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, அதே ஊரை சேர்ந்த கலிவரதன்(73) மற்றும் அவருடைய மருமகள் தீபலட்சுமி (35) ஆகியோர், கலிவரதனுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கித் தரவில்லை எனக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் விஜயசாரதி மீது சாணியை ஊற்றி, திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து விஜயசாரதி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கலிவரதனை கைது செய்தனர்.

Tags

Next Story