அர்ச்சகர் தட்டில் ரூ.500 வைத்த விழுப்புரம் பாமக வேட்பாளர்

அர்ச்சகர் தட்டில் ரூ.500 வைத்த விழுப்புரம் பாமக வேட்பாளர்

அர்ச்சகர் தட்டில் ரூ.500 வைத்த விழுப்புரம் பாமக வேட்பாளர், சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அர்ச்சகர் தட்டில் ரூ.500 வைத்த விழுப்புரம் பாமக வேட்பாளர், சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளி சங்கர் மாம்பழம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முகையூர் ஒன்றியம் முழுவதும் நேற்று பாஜக கூட்டணி வேட்பாளர் முரளி சங்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது காலை 8 மணியளவில் பாமக வேட்பாளர் முரளி சங்கர் ஒதியத்தூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்தார். வேட்பாளர் உரிய நேரத்திற்கு வந்த நிலையில் பாமக மாவட்ட நிர்வாகிகளும், கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்களும் வாக்கு சேகரிக்க வருவதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் ஏற்பட்டது. இதனால் உரிய நேரத்திற்கு வந்த வேட்பாளர் முரளி சங்கர் தோழமை கட்சி மாவட்ட முக்கிய தலைவர்கள் யாரும் வராததால் அங்கு கூடியிருந்த பாமக தொண்டர்களுடன் ஒதியத்தூர் கிராமத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள முருகன் கோயில் தரிசனம் செய்தார்.

அப்போது கோயில் அர்ச்சகர் பாமக வேட்பாளர் முரளி சங்கரை கௌரிவிக்கும் விதமாக மந்திரங்கள் ஓதி விபூதி தட்டை வேட்பாளரிடம் காண்பித்தார். அப்போது வேட்பாளர் முரளி சங்கர் அருகில் இருந்த நிர்வாகியிடம் ரூ.500 வாங்கி அர்ச்சகரின் விபூதி தட்டில் வைத்தார். பின்னர் பாமக மற்றும் தோழமை கட்சி முக்கிய மாவட்ட தலைவர் வந்தனர். இதனைதொடர்ந்து மீண்டும் வாக்கு சேகரித்த அதே பகுதிக்கு தோழமை கட்சி முக்கிய தலைவர்களுடன் வாக்கு சேகரிக்க தொடங்கினர். இதில் அர்ச்சகர் தட்டில் பாமக வேட்பாளர் முரளி சங்கர் ரூ.500 வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story