விழுப்புரம் பாமக வேட்பு மனு தாக்கல்; பாஜவினர் போலீசாரிடம் தகராறு
விழுப்புரத்தில் பாமக வேட்பாளர் மனு தாக்கல் செய்தபோது, பாஜவினர் தங்களையும் அனுமதிக்கக்கோரி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் முரளி சங்கர் மனு தாக்கல் செய்தார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத், பாஜக மாவட்ட செயலாளர் வி.ஏ.டி கலிவரதன், பாமக மாவட்ட செயலாளர் பால சக்தி, பாமக விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது மனு தாக்கல் செய்யும் போது மாவட்ட தேர்தல் அலுவலகம் உள்ளே வேட்பாளர் உடன் நான்கு பேர் மட்டுமே அனுமதி என்று கூறியிருந்தும் பிஜேபி விழுப்புரம் கவுன்சிலர் வடிவேல் பழனி தன்னையும் உள்ளே விட கோரி போலீசாரிடம் தகராறு செய்தார் இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story