விழுப்புரம் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 16,69,577 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், செஞ்சி, மயிலம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் பழனி வெளியிட்டார். 32,179 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர். இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story