விழுப்புரம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் மாதம் 4- ந்தேதி எண்ணப்படுகிறது.
இதற்கான தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ கொடுத்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக அவற்றை வாகனங்களில்,
எடுத்துச்செல்வார்கள். இதனை கண்காணித்து தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படை குழுக்களும், 21 நிலையான கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு அவர்கள்,
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற் றும் பரிசு பொருட்களை கொடுப்பதற்காக அவற்றை பார்சல் மூல மாக ரெயில்களிலும் கொண்டு செல்ல நேரிடலாம் என்பதால் ரெயில் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 6-ந்தேதி சென்னை புறநகர் பகுதியான தாம் பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடி, பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணம் யாருடையது என்று அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மற்றும் முக்கிய ரெயில் நிலையங்களின் வழி யாக செல்லக்கூடிய அனைத்து ரெயில்களையும் கண்காணித்து தீவிரமாக சோதனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் முக்கிய ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிக்கு மார், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், தனிப்பிரிவு ஏட்டு ரவி, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிலோ மின்ராஜ் மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ்,
செந்தூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, சேது, நெல்லை, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படு கிறதா? என்று ஒவ்வொரு பெட்டியாக போலீசார் தீவிர சோதனை செய்தனர். அதோடு பயணிகளின் உடைமைகளையும், ரெயில் நிலையத்திற்கு வந்த பார்சல்களையும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.