தேசிய அளவிலான மல்லர்கம்பத்தில் விழுப்புரம் மாணவர்கள் சாதனை
34 வது தேசிய அளவிலான மல்லர்கம்பம் விளையாட்டு போட்டியில், தமிழக விளையாட்டு வீரர்கள் ஒட்டு மொத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான (12வயது & 14 வயது) விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கமும், தனிநபர் பிரிவில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்கள்.
தேசிய அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி, அரியானா மாநிலம், ரோதாக் மாவட்டத்திலுள்ள, மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில், மார்ச் 29 முதல் 31 வரை நடைபெற்றது. இதில் 16 மாநிலங்களை சேர்ந்த 12 மற்றும் 14 வயதிற்குட்பட்ட 300க்கும் மேற்பட்ட மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக விளையாட்டு வீரர்கள் ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கமும், தனிநபர் பிரிவில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.
இதில் விழுப்புரம் மாவட்ட மல்லர்கம்பம் கழகத்தை சார்ந்த மணிதர்சன் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான ஒட்டு மொத்த மல்லர்கம்பம் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 12 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான பிரிவில் பிந்துஶ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் 15 வயதுக்குட்பட்டோர் குழு விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.