விழுப்புரம் - திருப்பதி பேசஞ்சர் ரயில் வரும் 18ம் தேதி வரை ரத்து

விழுப்புரம் - திருப்பதி பேசஞ்சர் ரயில் வரும்  18ம் தேதி வரை ரத்து

பைல் படம்

பராமரிப்பு பணிகள் காரணமாக, விழுப்புத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் வரும் 18ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் மார்ச் 18ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம -திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண்.16854) சனிக்கிழமை (மார்ச் 16) முதல் 18}ஆம் தேதி வரை காட்பாடி- திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி-விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண்.16853) திருப்பதி} காட்பாடி இடையே மார்ச் 18}ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து மாலை 4.30 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story