கால்நடைகளை வளர்ப்பது எப்படி தெரியுமா..?
கால்நடை வளர்ப்பு பயிற்சி
விவசாயிகள், பழங்குடியின மக்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவர் பாக்யராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக உதவி பேராசிரியர் மனோபவன், பழங்குடியின மக்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்து விளக்கமளித்தார்.
இதில் பழங்குடியினர் செயற்பாட்டாளர், விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன், பழங்குடி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சிவபெருமான், பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர். மேலும் 50 பேருக்கு ஆடு, மாடு, கோழிகளுக்கு தேவையான உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.
Next Story