விழுப்புரம் வி.ஆர்.பி. பள்ளியில் உலக மரபு வார விழா.
விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை சார்பில் உலக மரபு வார விழா விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் வே.சோழன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஆர்.கந்தசாமி வரவேற்றார். வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பா ளர் கோ.செங்குட்டுவன் கலந்துகொண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரபுச்சின்னங்கள், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களிடம் விளக்கிப்பேசினார்.
மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பானை ஓடுகள் உள்ளிட்டவை இதில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், யாதும் ஊரே யாவரும் கேளிர் சங்க நிர்வாகிகள் சீனி வாசன், சக்தி, விழுப்புரம் சிட்டி அமைப்பின் நிர்வாகி ஜவகர், வரலாற்று ஆர்வலர்கள் பஞ்சமூர்த்தி, மணிகண்டன், ராகுல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் பிரிதிவிராஜ் நன்றி கூறினார். முன்னதாக இவ்விழாவின்போது, விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.