பள்ளி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
ஜெயசூர்யா
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மகள் ஜெயசூர்யா (வயது 14). இவரது தாய் இறந்து விட்ட தால் ஜெயசூர்யா விக்கிரவாண்டியில் உள்ள தனது பாட்டி கண்ணகி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் ஜெயசூர் யாவுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப் ஜெயசூர்யா பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த ஜெயசூர்யா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டாள். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஜெயசூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் விக்கிர வாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (53) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென் றார். இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வர ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.