வெடிக்காரன் பட்டியில் விநாயகர் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
வெடிக்காரன் பட்டியில் விநாயகர் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், பாகநத்தம் ஊராட்சியில் உள்ள வெடிக்காரன் பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை மங்கல இசையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில்,விநாயகர் வழிபாடு, புன்யா ஹவாசனம், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், ஸ்பாஹாகுதி, இரண்டாம் காலையாக பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று கடம் புறப்பாடு நடைபெற்றது.
பிறகு, கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் வெகுமரசையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா தீபாதாரணை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாகனத்தம் ஊராட்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். கும்பாபிஷேக விழா கமிட்டியினர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். மேலும், மரக்கன்று வைக்க போதிய இட வசதி உள்ளவர்களுக்கு தென்னை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.