அறந்தாங்கி அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா
புனித நீர் ஊற்றப்பட்டது
அறந்தாங்கி அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
அறந்தாங்கி அருகன் குளக்கரையில் அமைந்துள்ள மங்கள விநாயகர் கோயிலில் சுற்றுலா வேன் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து அனுக்ஞை, கும்ப அலங்காரம், கோ பூஜை, லட்சுமி பூஜை, யாத்திர தானம் ஆகியவை நடந்தன. பின்னர் கடம் புறப்பாடாகி விநாயகர் சிலை மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சர்வ சாதக பணிகளை ரகுநாத சர்மா செய்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை சுற்றுலா வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story