விநாயகா மிஷன் - கோவா மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

விநாயகா மிஷன் - கோவா மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

 புரிந்துணர்வு ஒப்பந்தம் 

சேலம் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம், கோவா சிறப்பு அறிவுசார் சொத்து மையம், கோவா மருந்தியல் கல்லூரி ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சேலம் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம், கோவா சிறப்பு அறிவுசார் சொத்து மையம், கோவா மருந்தியல் கல்லூரி ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி விநாயகா மிஷன்ஸ் மற்றும் அதன் உறுப்பு நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான மாறுபட்ட கால படிப்புகளுக்கான சான்றிதழ், நிபுணத்துவ முன்னேற்ற திட்டங்கள் நடத்தப்படும். அதேபோன்று அறிவுசார் சொத்தில் அறிவுத்தளத்தை தொடர்ச்சியாக புதுப்பித்து, மேம்படுத்துவதற்கான தொடர் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். ஆராய்ச்சி பணியின் மூலம் உருவாக்கப்பட்ட அறிவுசார் சொத்துக்களுக்கான காப்புரிமை பெறுவதற்கான சேவைகள் வழங்குவதற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பி.கே.சுதிர், கோவா சிறப்பு அறிவுசார் சொத்து மைய நிறுவனர் டாக்டர் உமேஷ் பனாகர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரபாவதி, இயக்குனர்கள் ஜெய்கர், ஞானசேகர், சண்முகசுந்தரம், துணை இயக்குனர் சூரியநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story