விநாயகா மிஷன் ஹெல்த் சயின்ஸ் துறைக்கு உயர்தர நிலை சான்று அங்கீகாரம்

X
உயர்தர சான்று
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு அவசர கால மருத்துவ சிகிச்சை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் உயர்ந்த தரநிலைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகம், சென்னை அறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு அவசர கால மருத்துவ சிகிச்சை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் உயர்ந்த தரநிலைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அவசர கால மருத்துவ சங்க தலைவர் சரவணகுமார், துணைத்தலைவர் சாய்சுந்தர் ஆகியோர் துறையின் டீன் செந்தில்குமாரிடம் வழங்கினர். கருத்தரங்கில் துறையின் உதவி பேராசிரியர் அஜித்குமார் கலந்து கொண்டார். இதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களின் படைப்புகளை வழங்கினர். இந்த அங்கீகாரம் கிடைத்ததற்கு பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா ஆகியோர் துறையின் டீனுக்கு பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து துறையின் டீன் செந்தில்குமார் கூறுகையில், இந்திய அவசர மருத்துவ சங்கமானது சென்னையில் நடத்திய தேசிய கருத்தரங்கில், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது, கல்வியியல் சார்ந்த திட்டங்கள் மூலம் மாணவர்களை மேம்படுத்துவது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அவசர கால மருத்துவ சிகிச்சை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் நடைமுறையில் சிறந்து விளங்கும் கல்லூரி என்ற தரநிலை சான்றிதழ் வழங்கி அங்கீகரித்துள்ளது என்றார்.
Next Story
