விநாயகா மிஷன் பல்கலைக்கழக நிறுவனர் நினைவு தினம்

விநாயகா மிஷன் பல்கலைக்கழக நிறுவனர் நினைவு தினம்

சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழக நிறுவனர் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.


சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழக நிறுவனர் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.

சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் சண்முகசுந்தரம் நினைவு நாளையொட்டி, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு துறை டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன், துணைத்தலைவர் டாக்டர் அனுராதா கணேசன் ஆகியோர் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கினர். பின்னர் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை வளாகத்தில் செஞ்சுருள் சங்கம் மூலம் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதற்கு துறை டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி டாக்டர் ரவீந்திரன் கலந்து கொண்டார். இதில் துறை மாணவ, மாணவிகள் 110 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். முகாமில் பெறப்பட்ட ரத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. பின்னர் துறை வளாகத்தில் பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் சண்முகசுந்தரம் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Tags

Next Story