விநாயகா மிஷன் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விருது

விநாயகா மிஷன் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விருது
X

விருது பெற்ற பேராசியர்கள்

கோவை நாலெட்ஜ் ஆராய்ச்சி அகாடமி சார்பில் விநாயகா மிஷன் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஸ்ரீ ஆரோபிந்தோ யோகா அறக்கட்டளை சார்பில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் தனி நபர்களையும், அமைப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைக்காக விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் டீன் டாக்டர் செந்தில்குமாருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும், அவருக்கு சார்லஸ் வால்டர்ஸ் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சார்பிலும் அசோகா விருது வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து கோவை நாலெட்ஜ் ஆராய்ச்சி அகாடமி சார்பில் ஆண்டுதோறும் கல்வியியல் துறையில் சிறப்பாக செயலாற்றி வரும் கல்வியாளர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி அங்கீகரித்து வருகிறது. அதன்படி, விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பேராசிரியைகள் டாக்டர் பிரியாமதி, கலைவாணி, தமிழ்சுடர் ஆகியோரின் சிறந்த பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த விருதுகளை பெற்றதற்காக பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா கணேசன், துறையின் பேராசிரியர்கள் பலர் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story