விதிமுறைகளை மீறிய குடிநீர் குழாய் அகற்றப்படும்: நகராட்சி எச்சரிக்கை

விதிமுறைகளை மீறிய குடிநீர் குழாய் அகற்றப்படும்: நகராட்சி எச்சரிக்கை

வெள்ளகோவிலில் விதிமுறைகளை மீறி தெருக் குடிநீர் குழாய் பயன்படுத்தினால் அகற்றப்படும் என நகராட்சி அணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வெள்ளகோவிலில் விதிமுறைகளை மீறி தெருக் குடிநீர் குழாய் பயன்படுத்தினால் அகற்றப்படும் என நகராட்சி அணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுகுடி நீர் திட்டம் மற்றும் ஆங்காங்கே உள்ள நகராட்சி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகிய உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆழ்துளைக்கிணறுகள், கிணறுகளின் மோட்டார்கள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் சிறிய தொட்டிகள், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளில் நிரப்பப்படும். பின்னர் தெருக்களில் பொதுக் குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மழை இல்லாமல் கடும் வறட்சி காரணமாக நீர் வரத்து குறைந்து விட்டது. இந்த நிலையில் ஒரு சிலர் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் குடிநீர் குழாயில் நீளமான ரப்பர் குழாய்களை இணைத்து தங்களுடைய வீடுகளுக்கு தண்ணீர் பிடித்து வருகின்றனர். இது விதிமீறல் ஆகும் பல புகார்கள் வருகின்றன. பொதுக் குழாய்களில் குடங்களைக் கொண்டு வந்து தான் தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும்.இதனால் பலருக்கு தண்ணீர் கிடைப்பதில்லை விதிமீறல்கள் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட பொது குடிநீர் குழாய் அகற்றப்படும். இதை பொதுமக்களும் கண்காணிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story