தேர்தல் நடத்தை விதி மீறல் - நாட்டு மாடுகள் நலச் சங்கத்தினர் மீது வழக்கு

X
காவல் நிலையம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது தேனி நகராட்சி ஆணையர் மற்றும் நகர மன்ற தலைவரை கண்டித்து நாட்டு மாடுகள் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விஏஓ ஜீவா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நாட்டு மாடு நலச் சங்க தலைவர் கலைவாணன், செயலாளர் ஆதி மற்றும் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
