தேர்தல் விதிமுறை மீறல்: அதிமுக ஊட்டி ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
அதிமுக ஒன்றிய செயலாளர்
ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் பிரசாரத்திற்கு வந்திருந்தனர். சுமார் அரை மணி நேரம் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி தி.மு.க., அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் பா.ஜ.க., குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பிரசாரம் நிறைவடைந்து சிறிது நேரத்திலேயே பல்வேறு பகுதிகளில் இருந்து வர வழைக்கப் பட்டிருந்த அ.தி.மு.க., தொண்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் வைரல் ஆகின. அந்த வீடியோவில் அ.தி.மு.க., ஊட்டி ஒன்றியச் செயலாளர் பெள்ளி என்பவர் பணம் பட்டுவாடா செய்வது தெளிவாக தெரிந்தது.
குறிப்பாக பொதுமக்கள் கூட்டம் சேர்த்து தங்களுக்கு வாக்களிக்கும்மாறு பணத்தை கொடுத்து ஓட்டுபெற முயற்சித்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறப்பட்ட செயல் என்பதால் இதுகுறித்து துணை வட்டாட்சியர் தனலெட்சுமி , பறக்கும் படை FST 2C, ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பெள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.